அனுராதபுரம் நகருக்கும் 7 நாட்களுக்கு பூட்டு

அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதான நகரமான அனுராதபுர நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் 7 நாட்களுக்கு மூடுவதற்கு அனுராதபுரம் மாவட்ட வியாபார சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.