அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் GOMA முன்வைக்கும் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையின் விளைவாகவே தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை குறிப்பிட்டார்.