இன்று மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா !

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இன்று இடம்பெற்றது.

வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆவணி திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாட்டில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்துள்ளமையினால், ஏனைய மாவட்டங்களில் இருந்து மடு திருத்தலத்திற்கு வருகை தரும் பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.