நீராட சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி

குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே குளத்தில் நண்பர்கள் மூவர் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மூவரின் சடலத்தை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.