அனுமதி உள்ளவர்கள் மாத்திரமே புகையிரதத்தில் பயணிக்கலாம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் 6 கிலோ முள்ளம்பண்டி இறைச்சியுடன் ஒருவரை நேற்று   நள்ளிரவில் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலயாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜ.என்.விக்கிரமசிங்க தலைமையிலான பொலிஸார் நேற்று நள்ளிரவு காந்திநகர் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்ட நிலையில் முள்ளம் பண்டியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி அதன் இறைச்சியை உரைப்பையில் எடுத்துக் கொண்டு துப்பாக்கியுடன் திரும்பும் போது அவரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் 6 கிலோ முள்ளம்பண்டி இறைச்சி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர் காந்திகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.