நேற்று 118 பேர் கொவிட் தொற்றால் மரணம்!

நாட்டில் மேலும் 118 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 ஆண்களும் 2 பெண்களுமாக 17 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும் 37 பெண்களுமாக 101 பேரும் மரணித்தனர்.

நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340ஆக உயர்வடைந்துள்ளது.

நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 111 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.