வைத்தியசாலையில் நோயாளிகளால் இட நெரிசல்?

கொவிட்டால் பாதிக்கப்பட்டு களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் வௌியான கருத்துக்கள் குறித்து விசாரிக்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்தார்.

வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது ஒரு தற்காலிக நெரிசல் என்று கூறினார்.

மேலும் பிசிஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டு வார்டுகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படும் வரை ஏற்பட்ட தற்காலிக நெரிசல் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கொவிட் 19 நோயாளர்களுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் 2 புதிய வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.