கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று மாலை கனரக பாரவூர்தியும்  முச்சக்கரவண்டியும்   நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றப்பட்டார்  உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

மற்றையவர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.