உணவுப் பொதி விற்பனை செய்தவருக்கு கொரோனா

வத்தளை, ஹெந்தலை சந்தியில் உணவுப் பொதிகளை விற்பனை செய்யும் நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரின் மனைவி பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் பணி புரிந்து வரும் நிலையில் அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த நபர் கடந்த 03 ஆம் திகதி வரையில் ஹெந்தலை சந்தியில் உணவுப் பொதிகளை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் குறித்த நபரிடம் உணவுப் பொதிகளை விலைக்கு பெற்றவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகருக்கு அல்லது பிரதேச சுகாதார அதிகாரிக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.