அழகரத்னம் மனோ ரஞ்சன் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட பதியுதீனுக்கு எதிரான வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட கணக்காளர் அழகரத்னம் மனோ ரஞ்சன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிவுஸ்ஸ்ரீ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்

கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மூலம் அழைத்து சென்றதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.