‍இலங்கை மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள தடை நீடிப்பு.

இலங்கை உட்பட சில நாட்டு மக்களுக்காக பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன்  30 ஆம் திகதி வரையில் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஒமான்  ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் நிலவுகின்ற கொவிட் நிலைமை காரணமாக  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.