வெளிவிவகார அமைச்சின் துணை சேவை அலுவலகம் இரு தினங்களுக்கு மூட தீர்மானம்

கொழும்பு செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை சேவை அலுவலகம் எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 011-233 8836 மற்றும் 011-2335942 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.