கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தை மகன் உறவினர்  உட்பட 3 பேர்  இன்று அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கசிப்பு உற்பத்திக்கா பயன் படுத்திய பெரல் வெடித்து சிதறிய தீயினல்  சம்பவ இடத்திலேயே 56 வயதுடை தந்தை உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான் மேலதிக விசானைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

x