பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா

வெலிசர பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கொரோன தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் 93 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

வெலிசர தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் இவர் ஆவார்.