19 ஆவது திருத்தத்திற்கான தேர்வே மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக தெரிவு செய்தமை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான தெரிவு மாத்திரமாகும் என தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஏனையவர்கள் ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறாகவே செயற்பட்டனர் என குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரைணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.