புலமை பரிசில் பரீட்சை உ.த பரீட்சை நடைபெறுமா நாளை அறிவிக்கப்படும்

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கு அமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஏற்கனவே அறிவித்திருந்த தினத்தில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி புலமை பரிசில் பரீட்சையும், எதிர்வரும் 12 ஆம் திகதி உ.த பரீட்சையும் நடத்துவதற்கு திர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.