20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை சமர்ப்பிப்பதனால் தற்போதைய ஜனாதிபதி எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆளும்தரப்பினர் அறியாமல் செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.