ஹப்புத்தளையில் மேலும் 13 பேருக்கு கொரோனா!

ஹப்புத்தளை பொது சுகாதார பிரிவில் மேலும் 13 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகி உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

மேலும் இரண்டு பேருக்கு எண்டிஜன் பரிசோதனையில் இன்று தொற்றுறுதியாகியுள்ளது.

ஹல்துமுல்லை சுகாதார பிரிவில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு தொற்றுறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் தியத்தலாவை காஹகல்ல மற்றும் பண்டாரவளை கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.