குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எதிர்வரும் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த திணைக்களத்தின் அலுவலக நேரங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடவு சீட்டு தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 070 710 1060 அல்லது 070 710 10 70 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளத.

அத்துடன், குடிமக்கள் பிரிவுடன் தொடர்புகளை ஏற்படுத்த 070 710 1030 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் வீசா தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள 070 710 1050 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.