ரத்மலானை ரோஹாவின் துப்பாக்கிகள் மீட்பு

ரத்மலானை ரோஹாவின் 3 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் AK-47 ரக துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் ஹெரலியவல-கஹதுட்டுவ பகுதியில் இருந்து கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா
எனும் “ரத்மலானே ரொஹா” என்பவர் பொலிஸாருடன் மேற் கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.