நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.