முக்கிய அறிவிப்பு முஸல்லாவை வழங்கும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ளுமாறு ஏ. பி. எம். அஷ்ரஃப் கோரியுள்ளார்

பள்ளிவாசல்களுக்கு வருவோருக்கு முஸல்லாவை வழங்கும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ளுமாறு, முஸ்லிம் சமய விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரஃப் கோரியுள்ளார்.

கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக வக்பு சபை விதித்த வரையரைகளில் தொழுகைக்கு வரும் போது முஸல்லாவை எடுத்து வர வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

ஆனால் பிரயாணிகளுக்கு இக்கட்டுப்பாடு பாதிப்பாக இருப்பதனால் பல நகர்ப்புற பள்ளிவாயல்கள் முஸல்லாஹ்வோடு வராதவர்களுக்கு முஸல்லாவை வழங்குகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் முஸல்லாஹ் ஒரு நாளைக்கு பல பேரால் பயன்படுத்தப்படுவதால் கொவிட் 19 பரவலுக்கான சாத்தியம் அதிகம், எனவே இப்பழக்கத்தை உடனடியாத நிறுத்திக் கொள்ளமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மாற்றீடாக முஸல்லாஹ் இல்லாது பள்ளி வருவோருக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடம் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுவது சிறந்தது என்றும் முஸ்லிம் சமய விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரஃப் அறிவுறுத்தியுள்ளார்.