வீதி ஒழுங்குகளை மீறினால், நாளை முதல் அபராதம்

வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுவேரை கண்காணிக்க விமானப்படையினரின் உதவியும் பெறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.