மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகள் தபாலகங்களில் சேகரிக்கப்படும்

மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகளை சேகரிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் நாளை (05) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 653 தபாலகங்களில் இவ்வாறு மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகளை சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

அஞ்சல் வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இந்த தேசிய வேலைத்திட்டம் நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரை சகல தபாலகங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகள் இருந்தால் அவற்றை அருகில் உள்ள தபாலகங்களில் கையளிக்க முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க கேட்டுள்ளார்.