சிறுத்தையினை விரட்டுவதற்கான நடவடிக்கை

கொட்டகலையில் நாய்களை வேட்டையாடும் சிறுத்தையினை விரட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை – கிருஸ்வஸ்பாம் தோட்டத்தில் வசிப்பவர்களின் கோழிகள் மற்றும் நாய்கள் இரவு வேளைகளில் காணாமல் போகின்றமை தொடர்பில் கண்டறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் சிறுத்தை ஒன்று நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தை நாய்கள் மற்றும் கோழிகளை இரையாக்கும் விதமும் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதனை விரட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நீர் வெறுப்பு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள 5 நரிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மில்லனிய, ஹொரணை, இங்கிரிய மற்றும் மதுராவல ஆகிய பகுதிகளில் குறித்த நரிகள் கண்டறிப்பட்டுள்ளதாக வனவிலங்கு சுகாதார பணிப்பாளர், மருத்துவர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.