கம்மல்தொட்ட முகத்துவாரம் பகுதியில் நீராட சென்ற 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

நீர்கொழும்பு – செத்தபாடு – கம்மல்தொட்ட முகத்துவாரம் பகுதியில் நீராட சென்ற 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

7 இளைஞர்கள் நீராட சென்ற நிலையில் அவர்களில் மூவரே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.