மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

கண்புரையை அகற்றுவதற்காக களுத்துறை நாகொட மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தற்போது கடுமையான அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாமையே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை, மதுகம, அகலவத்த, பேருவளை, அளுத்கம ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கான ஒரே மருத்துவமனையாக இந்த நாகொட மருத்துவமனை காணப்படுகிறது. இருப்பினும் இந்த மருத்துவமனையில் போதுமான வசதிகள் காணப்படாமையினால் நாளாந்தம் இங்கு வந்து செல்லும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நீண்ட காலமாக காத்திருப்பு பட்டியலில் இருந்து அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேவையான சில உபகரணங்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.