மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்

சூரிய சக்தியைக் கொண்டு தேசிய மின்சக்தி கட்டத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்தை இணைப்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சில் நேற்றைய தினம் (02) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மின்சார சபைத் தலைவர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000 சமுர்த்தி குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சோலார் கூரைகளை பொருத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.