நியூ டயமன்ட் கப்பல் தற்போது இருக்கும் இடம்

தீப்பற்றிய எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் தற்போது, தென்கிழக்கு கடல் பரப்பில் உள்ள சிறிய இராவணன் கோட்டையிலிருந்து 90 கடல் மைல் தொலைவிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல், தற்போது மத்திய கிழக்கு சமுத்திர பரப்புக்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் உள்ள மசகு எண்ணெய்யை, வேறு கப்பலுக்கு மாற்றும் நோக்கில், வந்த மார்க்கத்தின் மூலமே அதனை மீள கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பீட்டையும், செலவுகளையும் வழங்குவதாக வெளியிட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய, தீப்பற்றிய எம்.ரி நியூ டயமன்ட் கப்பலை கொண்டுசெல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றலுக்கு உள்ளான எம்.டி.நிவ் டயமன்ட் கப்பலின் நிறுவனத்திடம் கோரப்பட்ட 442 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.