நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுமக்கள் தினமாக அறிமுகப்படுவத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமை, தற்போது பொதுமக்கள் தினமாக அறிமுகப்படுவத்துவதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை பொதுமக்கள் தினமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது மீண்டும் அது திங்கட்கிழமையாக மாற்றப்பட்டிருந்தது.

புதன்கிழமைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை மிக குறைவடைந்துள்ளதன் காரணமாக குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

மேலும, பொதுமக்கள் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.