கெகிராவ பிரதேச சபை உறுப்பினருக்கு பலத்த காயம்

கெகிராவ பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் வாகன விபத்தொன்றில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நெரஞ்சன் கோஷல என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (02) குறித்த பிரசேத சபை உறுப்பினர் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது டிப்பர் ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் கெகிராவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர பிரதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளடதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் ரக வாகனத்தின் சாரதி இன்று கெகிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெகிராவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.