மீரிகம நாராதெணிய தங்ஓவிட பிரதேசத்தில் ரிபீடர் ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

மீரிகம-நாராதெணிய-தங்ஓவிட பிரதேசத்தில் ரிபீடர் ரக துப்பாக்கி மற்றும் அதற்கு உபயோகப்படுத்தும் 5 ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 70 வயதுடைய சந்தேக நபரை இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை உடுகம-நாகியாதெணிய பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் நேற்று (02) கைது செய்துள்ளனர்.