துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில்  நாளை 5ம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவிருந்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்கபெறாமையினால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x