கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவு

நாட்டில் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட 1,923 கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில், அதிகமானோர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 529 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் 264 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 232 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 122 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
x