தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்களை ஸ்தாபிப்பதற்கு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்களை ஸ்தாபிக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோருக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தொழில் அமைச்சர், தொழிற்சங்கத்தினர் மற்றும் முதலாளிமார் ஆகியோர் இதற்கு முன்னர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானது முதல் இந்த வருடத்தின் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், 12,000 முதல் 14,000 இற்கு இடைப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அவர்களில் 11,000 பேருக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

x