15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 ஸ்புட்னிக் – 5 கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த கொவிட் தடுப்பூசிகள் அதிகாலை 1.15 அளவில், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள், 60 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக அரச ஔடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்காலத்தில் மேலும் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x