நாட்டின் பல பிரதேசங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பாகங்களின், இன்று இரவு வேளையில், 150 மில்லிமிற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

x