வீட்டில் போதைப் பொருளை பதுக்கிய இளைஞன் கைது

கஞ்சா போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 03ம் திகதி காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப் போருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தற்போதைய கொரோனா பரவல் நிலமையை அடுத்து கஞ்சா போதைப் பொருள் பொதியை எரியூட்டி அழிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

x