வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிமாக கடுமையான காற்றும் வீசும்.

அதேநேரம் சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல், பதுளை மாவட்டங்களிலும் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், இடிமின்னல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x