கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகைக்கு பற்றாக்குறையாகவுள்ள 6 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை 60 வயதுக்கு குறைந்தோருக்கு செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது தடவையாக தடுப்பூசிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வழங்குவது பொறுத்தமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மளவிகே தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்த போதிலும் வயதானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து இரண்டாவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, 90,000 பேருக்கு இரண்டாவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x