தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம் நியமனம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எமது செய்திச் சேவைக்கு இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அவரது பதவி விலகல் கடிதம் கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இடைக்கால பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ப.சத்தியலிங்கம் வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.