பாடசாலைகளில் அரசியல் இடம்பெறுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்

பாடசாலைகளில் அரசியல் செய்வதனை தடைச் செய்யுமாறு அரசாங்கத்ததிடம் கேட்டுக்கொள்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித்  தெரிவித்துள்ளார்.

கத்தானை புனிய செபஸ்டியார் பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை கட்டமைப்புக்குள் அரசியல் செயற்பாடுகள் மலிந்து போயுள்ளதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளளார்.

முன்னர் சமயத் தலைவர்களால் பாடசாலைகள் நிர்வகிக்கப்படும் போது பாடசாலை கட்டமைப்பில் அரசியல் செயற்பாடு இருக்கவில்லை எனவும் பேராயர் மேலும் தெரிவித்தார்.