ஹட்டன் – போடைஸ் வீதியில் பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குள்ளானமைக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை , குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவர் மேலதிக சிசிச்சைகளுக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டயகமயில் இருந்து இன்று காலை ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.