எரிவாயு சிலிண்டர் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

12.5 கிலோ கிராம் பொதுவான எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அது தொடர்பாக தொலைபேசியின் மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.

இதற்கான தொலைபேசி இலக்கம் 1997 ஆகும்.

எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம் உடன்பட்டிருப்பதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 1,493 ஆகும். இந்த விலைக்கு சிலிண்டரை சந்தையில் கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

x