நேற்றைய தொற்றாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்!

நாட்டில் நேற்று 29ந் கொவிட்-19 தொற்றுறுதியான 1,531 பேரில், மூன்றில் ஒரு பகுதியினர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 533 பேருக்கு நேற்று தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 129 பேர் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 61 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 145 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில், 107 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

கண்டி மாவட்டத்தில் 85 பேருக்கும், காலி மாவட்டத்தில் 84 பேருக்கும், பொலனறுவை மாவட்டத்தில் 48 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 46 பேருக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 35 பேருக்கும் தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நேற்று எவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியிருக்கவில்லை. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 106, 484 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் 95, 445 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

தொற்றுறுதியான 10, 372 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

x