சஹ்ரானின் சகோதரருக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா 2018ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக்காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

x