நாட்டை முழுமையாக முடக்கத் திட்டமா? பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.

ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும். இதனால் நாட்டை முடக்காது கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கும்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு இராணுவத்தால் 1500 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.