இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

ஆயிரம் ரூபா நாளாந்த வேதன அதிகரிப்பு என்ற போர்வையில், பெருந்தோட்ட மக்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள குரல் பதிவு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றபோதும், வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் பெருந்தோட்ட மக்களின் வருமானம், பாரியளவில் குறைவடைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

x