ஜனாதிபதி , பசுமைச் சமூக பொருளாதார இலக்குகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சௌபாக்கிய தொலை நோக்கு வேலைத்திட்டத்தின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.

அத்தோடு அவற்றை நிறைவேற்றுவதை பொறுப்பாக கருதுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று 28 ந் திகதி நடைபெற்ற பேண்தகு அபிவிருத்தி தொடர்பான ஊடக கலந்துரையாடலில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பசுமைச் சமூக பொருளாதார இலக்குகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

உலகளாவிய ரீதியில் தற்போது எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இத்திட்டம் அமையவுள்ளது. குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. பல நாடுகள் சூழல்நேயமிக்க பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பத்தில், இலங்கையும் அந்த நோக்கில் இணைய வேண்டும்மென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யோசனையை முன்வைத்த போது சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

´சுபீட்சத்தின் தொலைநோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி நேற்று அமைச்சரவையில் முன்வைத்த யோசனையில் முக்கியத்துவம் வாய்ந்த சில உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இரசாயன உரம், கிருமிநாசினி பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடையை விதித்தல், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை விரைவுபடுத்தல்,வன மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

சூழல் பாதுகாப்பு என்பது உலகில் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதற்கமைவாக சூழல் தொடர்பாக உலக நாடுகள் பலவும் கூடுதலான கவனத்தை செலுத்தியுள்ளதுடன் மாத்திரமின்றி கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுவருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

கிருமிநாசினி பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடையை விதித்தல்இ மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை விரைவுபடுத்தல் வன மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

x