நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவா்கள் கைது

கடந்த மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 25,644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12,883 பேர் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 339 கிராம் வெடிபொருட்களுடன் 339 பேரும், டெடனேட்டர்கள் 133, கைக்குண்டுகள் 40, டி56 ரக துப்பாக்கிகள் 6உம், கைத்துப்பாக்கிகள் 7, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 223 துப்பாக்கிககள் , போர 12 வகை துப்பாக்கிகள் 69உம் இதன்போது கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.